தலைமைறைவான பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்!.. வசமாக சிக்க வைத்த வாகிதா!..

 
muthu

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரனை பற்றி சமூக வலைதளப் பிரபலமான வாகிதா அளித்த புகாரின் அடிப்படையில் முத்துக்குமரன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியதாகவும் வாகிதா குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. பின்னர் வாகிதா அளித்த புகாரின் கீழ் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு முத்துகுமரன் அளித்த பதிலில் இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகியதாகவும், தனது பெயரை கெடுப்பதற்காக வீடியோக்களை எடிட் செய்து  வெளியிடப்படுவதாகவும் கூறி அவரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் முத்துகுமரனின் புகாரில் முகாந்திரம் இல்லை என ஏற்கப்படவில்லை. 

இந்த நிலையில், முத்துக்குமரனுக்கு சம்மன் வழங்குவதற்காக காவல்துறையினர் அவரது விருகம்பாக்கம் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால் அவர் தலைமறைவாகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கூடிய விரைவிலேயே முத்துக்குமரன் கைது செய்யப்படுவார் என்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பெற்று பேரும் புகழும் பெற்ற முத்துக்குமரன் இப்படி தகாத செயலில் ஈடுபட்டு சிக்கிக் கொண்டாரே என பலரும் கூறி வருகின்றனர்.

CR  Desk
CR Desk

7945 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web