×

சோம் அப்புடி என்ன செய்து விட்டார் கனம் கோர்ட்டார் அவர்களே...?

குழப்பத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்... ஆரிக்கு குவியும் ஆதரவு

 
பிக்பாஸ் வீட்டில் இந்த வராம் முழுக்க பெஸ்ட் பெர்பாமர் மூன்று 3 பேர் யார் என்று கேட்டதற்கு வீட்டில் உள்ள பெரும்பாலானோர் ஆரி மற்றும் சோம் இருவரின் பெயரை கூறினார்கள். அதில் ஆரியை அதிகம் பேர் கூறி அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.

இதை கேட்டு தலைவி சம்யுக்தாவிற்கு கடும் கோபம் வந்துவிட்டது. காரணம் ஏற்கனவே ஆரிக்கும் சம்யுக்தாவிற்கும் பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது. சம்யுக்தாவின் கேப்டன்ஷிப் சரி இல்லை என ஆரி அடிக்கடி அவருடன் வாக்குவாதம் செய்து வந்தார்.

இப்படியான நிலையில் ஆரியை எப்படியாவது வெளியில் அனுப்பலாம் என்று பார்த்தால் எல்லோரும் அவர் பக்கம் நிற்கிறார்கள் என சம்யுக்தா அப்செட் ஆகிவிட்டார். என்ன தான் சுசி இவர்களது பிரச்சனை கோர்ட்டில் பேசி தீர்த்து வைத்தாலும் கமல் வந்து இதற்கு நியாயம் கொடுத்தால் தான் முடிவுக்கு வரும் போல..

சரி ஆரியாவது, கோபப்பட்டு கத்தி பேசி இந்தவராம் எதையோ செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.ஆனால்,  இந்த சோம் அப்படி என்ன செய்துவிட்டார் என்று அவர்  சிறந்த பெர்பாமர் என வீட்டில் இருபவர்கள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் என்பது தான் புரியவில்லை.  


From around the web

Trending Videos

Tamilnadu News