எகிப்து தேச குயின் மாதிரி இருக்கீங்க... வைரலாகும் பிக்பாஸ் ரித்விகாவின் நியூ லுக்!
கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்த பிக்பாஸ் புகழ் ரித்விகா
Fri, 8 Jan 2021

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா வித்தியாசமான கோணங்களில் போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அதைப்பார்த்து எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு சரியான பதிலடியையும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது செம மாடர்ன் உடையில் டஸ்கி ஸ்கின் அழகை காட்டி சூப்பர் மாடர்ன் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு மகாராணியாக தோன்றியுள்ளார்.