×

பிக்பாஸ் சீசன் 4… கமல் இருக்கிறாரா?... விஜய் டிவியில் ஒளிபரப்பாகுமா?

பிக்பாஸ் சீசன் 4 ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகத்துக்கு விஜய் டிவி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தமிழ்நாட்டு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனி முத்திரைப் பதித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதற்குக் காரணம் அதைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்தான். அதனால் மற்ற மொழிகளில் ஒவ்வொரு சீசனுக்கும் வேறு வேறு பிரபலங்கள் தொகுத்து வழங்கினாலும் தமிழில் கடந்த மூன்று சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சீசன் 4 ஐ கமல் தொகுத்தளிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. அதற்குக் காரணம் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத்தேர்தல்தான் என சொல்லப்பட்டது. அதே போல இந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட கலர்ஸ் தொலைக்காட்சிதான் ஒளிபரப்பும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு இப்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல கமல்தான் அடுத்த சீசனையும் தொகுத்த்து வழங்குவார் என்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News