Connect with us

Bigg Boss

அடேய் இதுக்கு தானா அது… இரண்டாவது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 6 போட்டியாளர்கள்…

Biggboss Tamil7:  பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் நேற்று வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. கடந்த சில சீசன்கள் ட்ரோல்களை சந்தித்த நிலையில் இந்த சீசனின் தொடக்கத்திலேயே பல புதிய ரூல்ஸ் போடப்பட்டு இருக்கிறது. அதில் பலரும் எதிர்பார்ப்பில் இருந்த இரண்டாவது வீடு குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரியாலிட்டி ஷோக்களிலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இது பல மொழிகளில் நடந்து வருகிறது. அதில் தமிழ் நிகழ்ச்சிக்கான 7வது சீசன் நேற்று தொடங்கியது. வழக்கம் போல கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையும் படிங்க: வெற்றிமாறனின் அடுத்த 7 படங்கள்!. தரமான சம்பவம் பண்ண காத்திருக்கும் தளபதி விஜய்…

இந்த நிகழ்ச்சியில் மணிசந்திரா, ப்ரதீப் ஆண்டனி, ரவீனா, வினுஷா, பவா செல்லத்துரை, விசித்ரா, யுகேந்திரன், நிக்சன், விஜய் வர்மா, பூர்ணிமா, அனன்யா, ஐசு, ஜோவிகா, கூல் சுரேஷ், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், அக்‌ஷயா என பல துறைகளில் இருந்து போட்டியாளர்கள் இறக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசன் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இருப்பது அனைவரும் ப்ரோமோ மூலமே தெரிந்து வைத்திருப்போம். எப்படி இரண்டு வீடு ஆண், பெண் எனப் பிரிப்பார்களோ இல்லை ஏழை, பணக்கார வீடு எனப் பிரிப்பார்களோ என பல கேள்விகள் எழுந்தது.

அதெற்கெல்லாம் பதில் சொல்லும் பொருட்டு பிக்பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்கே நேற்று வித்தியாசமாக இருந்தது. முதல் போட்டியாளரிடம் கொடுக்கப்பட்ட பேட்சை பேசிய இரண்டாவது போட்டியாளர் வாங்க வேண்டும். அப்படி அவர்கள் சமாதானம் ஆகாத நிலையில் பேட்ச் மூன்றாவது போட்டியாளரிடம் சென்று விடும்.

இதையும் படிங்க: அஜித் மாதிரியே விஜயையும் மாத்திட்டாங்க! இனிமேல் அவ்ளோதான் – கப்பலையே கவுத்திப்புட்ட கேப்டன்

இப்படி மாறி மாறி கடைசியாக வீட்டிற்குள் நுழைந்த விஜய் வர்மா முதல் கேப்டனாக மாறினார். அவரை இம்ரெஸ் செய்யாத வினுஷா, ரவீனா, ஐஸு, அனன்யா, பவா செல்லத்துரை, நிக்‌ஷனை தேர்ந்தெடுத்தார். அவர்கள் 6 பேரையும் இரண்டாவது வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார் பிக்பாஸ். அவர்கள் முதல் வீட்டிற்கு வரும்வரை பேசவே மாட்டாராம். அங்கு ஒரு குட்டி பாஸும் இருப்பதாக கமலே தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading

More in Bigg Boss

To Top