Vjs
பிக்பாஸ் சீசன் 8 தொடங்கியதில் இருந்தே விஜய் சேதுபதி எப்படி நடத்துவார் என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆரம்பித்த புதிதில் விறுவிறுப்பாக போனது. விஜய்சேதுபதி ‘என் ரூட்டே தனி’ன்னு சொல்லி சூப்பரா கொண்டு போறாருன்னு விமர்சனம் பண்ணினாங்க.
விஜய்சேதுபதிக்கு எதிர்ப்புகள்
ஆனா போகப் போக போட்டியாளர்களின் மனதைப் புண்படுத்துற மாதிரி பேசுறாருன்னு விமர்சனம் விழுந்தது. மனதில் பட்டதை ‘பட்’டென்று சொல்லி விடுகிறார். இது பல நேரங்களில் நிகழ்ச்சிக்கு சாதகமாக இருந்தாலும் பல நேரங்களில் அதுவே ஒரு பின்னடைவை உண்டாக்கி விடுகிறது. இதனால் விஜய்சேதுபதிக்கு மேலும் எதிர்ப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
கமல் அப்படி அல்ல
Also read: 4 கதை சொல்லி 5-வதாக சூர்யா ஓகே செய்த கதைதான் கங்குவா!.. லீக் ஆன புதிய தகவல்!..
இதே நேரம் கமல் என்றால் சொல்ல வேண்டிய விஷயத்தை நாசூக்காக சொல்லி இருப்பார். யாருடைய மனதையும் காயப்படுத்த மாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். இப்போதும் விஜய் சேதுபதியைப் பற்றி விமர்சனம் எழுந்துள்ளது. பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுறாரு.
கன்டென்ட்
bigg boss8
இவரே கேள்வி கேக்குறாரு. அப்புறம் இவரே பதில் சொல்ல விடாம சரி ஒக்காருங்கன்னு சொல்றாரு. கேள்வி கேட்டா பதில் சொல்ல விடணும். அப்போ தான் ஏதாவது கன்டென்ட் கிடைக்கும். அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு தெரியும். ஒரு தரப்புக்கு மட்டும் விஜய் சேதுபதி பேசுற மாதிரி இருக்குன்னு இப்போ விமர்சனம் வர ஆரம்பித்துள்ளது.
நீடிப்பாரா?
Also read: அப்போ தளபதி, இப்போ திடீர் தளபதியா..? ரஜினியை விடாமல் துரத்தும் ப்ளூசட்ட மாறன்
இப்படியே போனால் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்து விடும். இனியாவது தன்னோட பாணியை மாற்றிக் கொள்வாரா விஜய் சேதுபதி? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். போட்டியாளர்களை வைல்டு கார்டில் வரவைப்பது போல இவரையும் மாற்றி விட்டு வேறு யாரையாவது பிக்பாஸை நடத்த விடுவார்களா என்று சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது.
மரியாதை கலந்த பயம்
கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும்போது ஒரு மூத்த நடிகர் என்றதும் போட்டியாளர்களுக்கு அவர் மேல் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்தது. ஆனால் இப்போது விஜய்சேதுபதியிடம் அந்தப் பயம் போட்டியாளர்களுக்கு இல்லவே இல்லை. அவரை அசால்டாக எதிர்கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
TVK Vijay:…
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…