×

லூசு.... நேரலையில் தர லோக்கலா திட்டிய சுரேஷ் - வீடியோ!

நேரலை நிகழ்ச்சியில் கெட்ட வார்த்தையில் திட்டிய பிக்பாஸ் சுரேஷ்

 
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று குறுகிய நாளில் பெரும் பிரபலமானவர்  சுரேஷ் சக்ரவர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். பாலசந்தர் இயக்கத்தில் மம்முட்டி நடித்த அழகன் திரைப்படத்தில் சொக்கு எனும் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

‘பாட்டிகள் ஜாக்கிரதை’ என்ற பெயரில் வெளியான குறுந்தொடரில் பாட்டி வேடத்தில் நடித்தவர். அவ்வை சண்முகி படத்தில் நடிப்பதற்கு இந்த கதாபாத்திரமே கமலுக்கு இன்ஸ்பிரேஷன். திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

அத்துடன் ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியையும் சில காலம் நடத்தியுள்ளார்.  ஆஸ்திரேலியாவில் பனானா ட்ரீ என்கிற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு வரும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கும் உதவி வருகிறாராம்.  மேலும், அன்புடன் ராமகிருஷ்ணன் என்கிற பெயரில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

சமையல் வித்தகரான இவர் இவரின் பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலும் வைத்து அதில் விதவிதமான சமையல்களை எப்படி செய்வது என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவ்வளவு திறமை வாய்ந்த சுரேஷ் திரை நட்சத்திரங்களுடன் நெருக்கமான நண்பராக இருந்தாலும் பிக்பாஸ் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அண்மையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுரேஷை யூடியூப் சேனல்கள் தொடர்ந்து பேட்டி எடுத்து வருகின்றனர். அந்தகையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுரேசுக்கு விடாமல் போன் அடித்துக்கொண்டே இருந்ததால் கோபப்பட்டு கெட்ட வார்த்தையால் மோசமாக திட்டியுள்ளார். ஆனால், அப்போது லைவ் முடியவேயில்லை. அதை சொன்னதும் ஷாக்காகி ஜர்க்காகி விட்டார். மனுஷன் தர லோக்கல் போல... இதோ அந்த வீடியோ..

From around the web

Trending Videos

Tamilnadu News