2வது கணவரை பிரிந்த பிக்பாஸ் தாமரை?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான  தாமரை செல்வி மற்றும் அவரது கணவர் பார்த்தசாரதி இருவரும் பிரிவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு
 
bigg boss thamarai

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான  தாமரை செல்வி மற்றும் அவரது கணவர் பார்த்தசாரதி இருவரும் பிரிவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாமரை செல்வியின் கணவர் பார்த்தசாரதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து  ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து தனது இயல்பான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தாமரை செல்வி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நடைபெறும் மேடை மற்றும் நாடகக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். வாழ்க்கையில் பல்வேறு பொருளாதார சிரமங்களை எதிர்கொண்ட தாமரைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது  பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக தாமரை செல்வி அறிமுகமானபோது, ஆரம்பத்தில் அவரைப் பற்றி பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தனது வெகுளித்தனமான பேச்சு, வெளிப்படையான அணுகுமுறை மற்றும் டாஸ்க்குகளில் காட்டிய ஈடுபாடு ஆகியவற்றால் பார்வையாளர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தனது குடும்பம் மற்றும் கடந்துவந்த வாழ்க்கைப் போராட்டங்கள் குறித்து பிக்பாஸ் வீட்டில் தாமரை பகிர்ந்துகொண்ட விஷயங்களும் அப்போது ரசிகர்களை நெகிழ வைத்தன.

bigg boss thamarai

போட்டியின் இடையே பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் வாய்ப்பு கிடைத்தபோதும் அதனை ஏற்காமல் தொடர்ந்து விளையாடிய அவரது முடிவும் அப்போது பேசப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் குடும்பத்தினர் சந்திப்பு தொடர்பான பகுதியில் தாமரையை பார்க்க அவரது கணவர்  பார்த்தசாரதி வீட்டிற்குள் வந்திருந்தார். கணவரைப் பார்த்ததும் தாமரை உணர்ச்சிவசப்பட்ட காட்சிகளும், இருவரும் அன்பை வெளிப்படுத்திய தருணங்களும் அப்போது ரசிகர்களிடம் கவனம் பெற்றன. மனைவி விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்த்தசாரதி ஊக்கப்படுத்தியதும் பேசப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பார்த்தசாரதி துணிக்கடை ஒன்றின் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தாமரை செல்விக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. சமூக வலைதளங்களிலும் அவர் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார்.
தாமரை - பார்த்தசாரதி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தனர்.  2024-ல் இருவரும் கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும்  புஷ்பா 2 பாடலுக்கு இணைந்து நடனமாடிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. 

இந்த  நிலையில், தற்போது இருவரும் பிரிவதாக வெளியாகியுள்ள தகவல் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. தாமரை - பார்த்தசாரதி இடையேயான பிரிவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.  தற்போதைய நிலையில் பார்த்தசாரதி தரப்பிலிருந்து வெளியாகியதாக கூறப்படும் பிரிவு குறித்த அறிவிப்பே இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து  தாமரை செல்வி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags

From Around the web