சிசிடிவி காட்சியெல்லாம் ரிலீஸ் செய்யும் பாலாஜி முருகதாஸ்.. பிரச்னை எங்கே போய் முடியப்போகுதோ?..

 
balaji

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ், ஃபயர் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த நிலையில், தீபாவளி அன்று அவரது வீட்டில் போதைப்பொருள் பிரிவு போலீசார் நடத்திய திடீர் சோதனை தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சென்னை திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடியில் வசித்து வரும் பாலாஜி முருகதாஸ் வீட்டிற்கு, தீபாவளி பண்டிகையன்று நள்ளிரவில் 15 போலீசார் சென்றுள்ளனர். அவரது வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலீசார் வீட்டிற்குள் வந்ததும் பாலாஜி தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். அப்போது போலீசார் வீடியோ எடுக்க வேண்டாம் எனத் தடுத்ததாகவும், அதற்கு பாலாஜி, என்னிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. தாராளமாகச் சோதனை செய்யுங்கள். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. தேவைப்பட்டால் எனக்கு ரத்தப் பரிசோதனைகூட செய்துகொள்ளுங்கள் எனப் பதிலளித்துள்ளார்.

ஆனால், அங்கு போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், எந்தவிதமான வாரண்ட்டும் இல்லாமல் நள்ளிரவில் வீட்டிற்குள் வந்து சோதனை நடத்தியதாகவும், தன்னைப் பற்றி யார் புகார் அளித்தார்கள், எதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்குப் போலீசார் விளக்கம் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் ஹவுஸ் ஓனர் வீட்டைக் காலி செய்யுமாறு கூறியதாகவும், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும் என்றும், இது  தொடர்பாக கோர்ட்டுக்கும் போகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தற்போது இந்தச் சோதனையின் போது பதிவான சிசிடிவி காட்சிகளையும் பாலாஜி வெளியிட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

Tags

From Around the web