பிக் பாஸ் தனலட்சுமியும் 11.11ல நிச்சயம் செஞ்சிக்கிட்டாரு.. மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!..

 
danalakshmi

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தனலட்சுமியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தனலட்சுமி, தனது அனாவசியமான பேச்சால் பல விமர்சனங்களை சந்தித்தார். அதன் பிறகும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமிக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில் பறை ஆல்பம் பாடல், நிர்பயா என்ற குறும்படம், என் அவளுக்காக என்ற வெப் சிரீஸ் போன்றவற்றில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தனலட்சுமிக்கு வசந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை  பார்த்த ரசிகர்கள் தனலட்சுமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags

From Around the web