×

இந்த வாரம் எலிமினேட் ஆவது இவர்களா? ஆப்பு வைத்து அனுப்பும் மக்கள்!

பிக் பாஸ் 4ல் தற்போது மொத்தம் 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர். 75 நாட்களை இந்த ரியாலிட்டி ஷோ கடந்துவிட்ட நிலையில் தற்போதும் போட்டியாளர்கள் இடையே தினமும் சண்டை சச்சரவு என பல விஷயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

இந்த வாரம் வழங்கப்பட்ட கோழி பண்ணை டாஸ்கில் ஆரி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் இடையே மோதல் வெடித்ததையும் பார்த்தோம். அதனால் வாரம் முழுவதும் பரபரப்பாகவே இருந்து வந்தது.

நாமினேஷன் லிஸ்டில் தற்போது மொத்தம் 7 பேர் இருக்கின்றனர். ஆரி, அனிதா, அர்ச்சனா, ரியோ, ஷிவானி, சோம் சேகர் மற்றும் ஆஜித் ஆகிய ஏழு பேர் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நிலையில் அதிலிருந்து வெளியே போகப்போவது யார் என தெரிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் பதிவான வாக்குகளில் அஜித்துக்கு தான் குறைவாக ஓட்டுகள் கிடைத்துள்ளது என்றும், அதனால் அவர் தான் வெளியேற வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மையா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

ஆஜித் அல்லது ஷிவானி ஆகியோரில் யாராவது ஒருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு உள்ளது என முன்பிருந்தே கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News