×

ஆரம்பமே அமர்களமா இருக்கே... முதல் நாளே தெரிக்கவிட்ட பிக்பாஸ் பரபலங்கள்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். 
 

இந்நிலையில் நேற்றைய தினமே அவர்கள் அனைவரும் ஏதோ வெகுநாள் பழகியது போல் பேசிக் கொண்டனர். இன்றிலிருந்து தான் நிஜமான போட்டி ஆரம்பம் ஆகிறது. இதனையடுத்து நேற்றைய தினம் பிக்பாஸ் அவர்களுக்கு செக் வைக்கும் விதமாக ஒரு ரூம் மற்றும் கழிவறை பூட்டப்பட்டிருக்கும் என்று அறிவித்தார். இது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் இன்றைய தினம் முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் உற்சாகத்துடன் நடனமாடுகின்றனர். இதைப்பார்த்த ரசிகர்கள் முதல் நாளே இப்படி அதிரடியாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News