அழகு பதுமையாக பிக்பாஸ் சம்யுக்தா - லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்
Mon, 1 Feb 2021

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் மாடலிங் செய்து கொண்டிருந்தார். கார்த்திக் என்கிற தனது நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஆரியிடம் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை. மேலும், தவறான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கமலிடமும் திட்டி வாங்கினார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் சேலை அணிந்து எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.