×

பாலா கேப்டன்... முட்டிக்கொள்ளும் சண்டை... தரமான சம்பவம் காத்திருக்கு?

நேற்று பிக்பாஸில் ஷிவானிக்கும், அனிதாவுக்கும் முட்டிக்கொண்டது. ஷிவானி திடீரென கத்தியது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என கேப்டன் பாலாவிடம் அனிதா புகார் சொல்ல, அவர் ஷிவானியிடம் சென்று ஸாரி கேட்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினார். 
 

பதிலுக்கு ஷிவானி நான் சொன்னதுக்கு ஸாரி ஆனா அவங்களும் தான் சண்டை போட்டு கத்துறாங்க என சரியாக பாயிண்டை பிடித்தார். ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிந்தது. தொடர்ந்து கிச்சனில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பித்தது. 

ஷிவானி கப்புகளில் அளவாக பாலை ஊற்றிக்கொண்டு இருக்க, பாலா தான் கேப்டன் என அவரிடம் சிலபல கேள்விகள் கேட்டு கடைசியில் ஷிவானி கோபித்துக்கொண்டு சென்று விட்டார். இதையடுத்து இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் நான் என் மனசுல பட்டதை தான் பேசுவேன் என ஷிவானி மறுபடியும் சரியாக பேசினார்.

இதையடுத்து அனைவரையும் அழைத்த பாலாஜி கிச்சன் கேப்டன் தான் எல்லாத்தையும் பார்க்கணும் என பேசினார். இதற்கு அனிதா எனக்கு ரேஷன் பத்திலாம் தெரியாது என கூறினார். அந்த நேரத்தில் பாலாஜி எதுவும் பேசவில்லை என்றாலும், பின்னர் ஆஜீத்திடம் எனக்கு வந்த கோபத்துக்கு அவங்கள கிச்சன் கேப்டன்ல இருந்து தூக்கி இருக்கணும். ஆனா பண்ணல என கோபப்பட்டு பேசினார். வரும் நாட்களில் இந்த கிச்சன் பஞ்சாயத்து பெரிதாக வெடிக்க வாய்ப்புகள் இருக்கிறது

From around the web

Trending Videos

Tamilnadu News