Connect with us
kamal

Bigg Boss

துவங்கியது பிக்பாஸ் சீசன் 5 – போட்டியாளர்கள் யார் யார்?… முழு விபரம்….

சின்னத்திரையில் பெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருக்கிறது. ஹாலிவுட்டில் பிக் பிரதர் என துவங்கிய நிகழ்ச்சி தற்போது இந்தியாவில் ‘பிக் பாஸ்’ என்கிற பெயரில் புகழடைந்துள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகி வருகிறது. தமிழைப் பொறுத்தவரை இதுவரை 4 சீசன்கள் நடந்து முடிந்தது. நடிகர் கமல்ஹாசனே இந்த 4 சீசன்களையும் நடத்தினார்.

இந்நிலையில், 5வது சீசன் நேற்று துவங்கியது. கமல்ஹாசன் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார். வழக்கமாக 16 பேர் போட்டிகளில் இடம் பெறுவார்கள். இந்த முறை 18 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அதேபோல், இதுவரை நடந்த 4 சீசன்களிலும் ஆண்களும், பெண்களும் சரிசமமாக இருப்பார்கள். இந்த முறை பெண் போட்டியாளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். அதாவது, 7 ஆண் போட்டியாளர்களும், 10 பெண் போட்டியாளர்களும், ஒரு திருநங்கையும் பங்கேற்றுள்ளனர்.

biggboss

போட்டியாளர்கள் விபரம் கீழே:

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (சினிமா விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (டிவி சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (விஜய் டிவி தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (திரைப்பட நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (டிவி சீரியல் நடிகை)
9. நதியா (மலேஷிய மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (சினிமா நடிகர், டிவி தொகுப்பாளர்)
11. வருண் (சினிமா நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top