×

எதிர்பாராததை எதிர்பாருங்கள்... செம மாஸான பிக்பாஸ் புரமோ வீடியோ...

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
 
promo
ஹைலைட்ஸ்:
‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’என கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களிடம் வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். 2017ம் வருடம் ஒளிபரப்பான முதல் சீசன் வெற்றி பெற்றதால் தற்போது வரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. 4 சீசன்களையுமே கமல்ஹாசனே நடத்தினார். கடந்த  நடிகர் ஆதி டைட்டில் வின்னரானார்.

biggboss

அதன்பின், பிக்பாஸ் 5வது சீசன் எப்போது துவங்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.  இந்த முறை விஜய் டிவி மூலம் பிரபலமடைந்த புகழ், பாலா, ஷிவானி, அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. ஒருபக்கம் போட்டியாளர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.  இந்த முறையும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். 

biggboss
biggboss kamal

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு திருமண வீட்டில் நடக்கும் கலாட்டாக்களை காட்டி  இங்கேயே இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’என கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


 

From around the web

Trending Videos

Tamilnadu News