Biggboss Tamil 8: ஏன் அவருக்கு கையில்ல?... இந்த கருமத்தை எல்லாம் பாக்க முடியல!

 
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் தற்போது மொக்கையாக ராஜா ராணி டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. ஆறடி உயர ராஜாவுக்கு 4 ஆடி உயர ராணி என்றால் கேட்கவே கன்றாவியாக இருக்கிறது அல்லவா. அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. எடிட் செய்யப்பட்டு வெளியாகும் காட்சிகளையே நம்மால் பார்க்க முடியவில்லை. பிக்பாஸ் மற்றும் அவர்கள் டீம் எப்படித்தான் நாள் முழுவதும் இதை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக அந்த எடிட்டிங் டீமின் மன தைரியத்தை நிச்சயம் பாராட்டிட வேண்டும். இதையும் படிங்க: Biggboss Tamil 8: அவங்களுக்கு ‘வெஷத்த’ வச்சு குடுத்துரலாம்… இதெல்லாம் ரொம்ப தப்பு?.. இதுவரை தான் டல்லடித்தது என்றால் மேலும் அதே வழியிலேயே நான் தலைகீழாக தான் குதிப்பேன் என்று கவுண்டமணி போல பிக்பாஸ் டீம் மொக்கை, மொக்கையாக டாஸ்க்குகளை அளித்து வருகின்றனர். போட்டியாளர்களும் ஏதோ ஜாலியாக பிக்னிக் வந்தது போல என்ஜாய் செய்து வருகின்றனர். இதற்கு மேல் வைல்டு கார்டு என்ட்ரிகளையும் உள்ளே அனுப்ப முடியாது. வீட்டில் இருந்து வெளியேறியவர்களை தான் அனுப்ப முடியும். இதனால் என்ன செய்வது என்று பிக்பாஸ் டீம் ரூம் போட்டு யோசித்து வருகின்றனர். அல்லது அப்படி யோசிப்பது போல பாவனை செய்கின்றனர். இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடி விஜே விஷால்-தர்ஷிகா அலப்பறைகள் தாங்க முடியவில்லை. Biggboss Tamil 8: ஏன் அவருக்கு கையில்ல?... இந்த கருமத்தை எல்லாம் பாக்க முடியல! #image_title இவர்கள் உண்மையிலேயே காதல் செய்கிறார்களா? இல்லை கடலை போடுகிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் எப்போது பார்த்தாலும் விஷாலுக்கு தர்ஷிகா சாப்பாடு ஊட்டி விடும் காட்சிகளை காண முடிகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஏன்மா அவருக்கு சாப்பிட கை இல்லையா? என்று இருவரையும் கழுவி ஊற்றி வருகின்றனர். எப்படா இந்த பிக்பாஸ் சீசன் முடியும்?.. இதையும் படிங்க: Biggboss Tamil: சோத்துல உப்பு இல்லையா? சவுந்தர்யா, சிவாவை தரக்குறைவாக பேசும் போட்டியாளர்கள்…

From Around the web