Biggboss Tamil 8: வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் திவாகர்?... யாருன்னு தெரியுதா?

 
Biggboss Tamil 8: வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் திவாகர்?... யாருன்னு தெரியுதா?
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் வருகின்ற அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் தற்போது விலகி இருக்கிறார். இதனால் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றனர். அதற்கான ப்ரோமோ ஷூட் பாண்டிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்துள்ளது. இதற்கிடையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. அதில் டிடிஎப் வாசன் தொடங்கி ஏகப்பட்ட நபர்கள் அடிபட்டு வருகின்றனர். Biggboss Tamil 8: வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கும் திவாகர்?... யாருன்னு தெரியுதா? இந்தநிலையில் சமூக வலைதளங்களில் தன்னுடைய ரீல்ஸ் மூலமாக பிரபலமாகி வரும் திவாகர் இந்த நிகழ்ச்சியின் உள்ளே செல்ல இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து யூடியுப் பேட்டிகள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் திவாகர் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவருக்கென ஒரு ரசிகர் வட்டம் உருவாகி இருக்கிறது. எனவே அவர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுக்கும் பட்சத்தில், பிக்பாசின் டிஆர்பி வேறு லெவலில் இருக்கும். இதை வைத்து பார்க்கும்போது இந்த சீசனில் அவர் நிச்சயம் கலந்துகொண்டு புகழ் பெறுவார் என்று தெரிகிறது. கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் எல்லா தரப்பில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web