Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்குள் சென்று வந்ததால் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி போட்டிகள் இன்று நடக்க இருக்கிறது. இந்த சீசன் தொடங்கியதில் இருந்து பெரிய அளவிலான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இல்லை. காரணம் போட்டியாளர்கள் தேர்வுதான். இருந்தும் பினாலேவுக்கு பலரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
விஜய் சேதுபதி முதல்முறையாக தொகுத்து வழங்கி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தினை நிறைவு செய்கிறது. இன்றைய எபிசோட் நாளை மாலையில் இருந்து ஒளிபரப்பாகும். வெற்றிகரமாக முத்துகுமரன் டைட்டிலை தட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வின்னர் குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால் பிக் பாஸ் தமிழ் முதல் 5 சீசன்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதில் முக்கிய இடம் ஐந்தாவது சீசனுக்கு தான். இதில் பாலா மற்றும் ஆரி இருவருக்கு இடையேயான சண்டை பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதுபோல போல வைல்ட் கார்ட்டாக உள்ளே வந்த பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா உள்ளே வந்து பாலாவை தன்னுடைய மகன் என சொந்தம் கொண்டாடி கிரிஞ்ச் கண்டெண்ட்டை உருவாக்கினார். இது ரசிகர்களுக்கு மேலும் கடுப்பை ஏற்படுத்தியது.
அன்பு ஜெயிக்குமா என நிஷாவுடன் டயலாக் விட்டதும் பரபரப்பாக ஒரு கட்டத்தில் அர்ச்சனா, நிஷா உள்ளிட்டோர் மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அர்ச்சனாவுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.
இதை தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் தற்கொலை எண்ணம் வரை தலைதூக்கியதாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு தங்கை கணவர் அர்ஜூன் தான். ஓவர் பாதுகாப்பாக இருந்தாராம். எப்போதும் அவரை செக் செய்துக்கொண்டே இருப்பதை வழக்கமாகவும் வைத்து அர்ச்சனாவை மீட்டு கொண்டு வந்ததில் அவருக்கு பங்கு அதிகமாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…