Vanitha Vijayakumar: பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இறுதி போட்டியில் அர்ச்சனா வென்று கப்பை தட்டி சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராகவே பேசி வந்த வனிதா தன்னுடைய கடைசி ரிவியூ நிகழ்ச்சியில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். அதற்கு அவரை ரசிகர்கள் கலாய்க்கவும் தவறவில்லை என்பது தனிக்கதை.
இதுகுறித்து வனிதா பேசும் போது, அர்ச்சனா ஜெயிச்சது என்னால் நம்பவே முடியவில்லை. ஜனநாயகம் இல்லை பணநாயகம் தான் வென்றது. இரண்டுமே விஜய் டிவி பிராடக்ட் தான். இதில் மாயா பெயரை யூஸ் செய்து குரோஷி மற்றும் புகழ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கோட் ஷூட்டிங்கில் ரசிகர்களை சந்திக்கும் விஜய்!… கெட்டப்பால் கவலைப்படாத வெங்கட் பிரபு!… ஏன் தெரியுமா?
கமல் சாரிடம் மன்னிப்பு கேட்டவர்கள். ஏன் மாயாவிடம் கேட்கவில்லை? இதை என்னிடம் அவர்கள் நேரில் மாட்டும் போது கேட்பேன். ஒரு பொண்ணு பத்தி பேசுறது சரியே இல்ல. எந்த சீசன்லையுமே இப்படி வெறுப்பாகவில்லை. வின்னர் அறிவிப்பின் போது நான் வெளியில் வந்துவிட்டேன்.
வீட்டில் இருப்பவர்கள் அர்ச்சனாவை ஏத்துக்கொள்ளவே இல்ல. எந்திரன் படத்தில் கடைசியில் எல்லா ரோபோவும் சேரும்ல. அதுப்போல பாட்களால் அர்ச்சனா ஜெயிச்சது கமலால் ஏத்துக்கவே முடியலை. நைட் அங்கு பெரிய சண்டனை நடந்தது. ரொம்ப பிரச்னை ஆனது. என்னுடைய பொண்ணு அப்படி கமலிடம் நடந்து கொண்டால் கூட நான் சப்போர்ட் செய்ய மாட்டேன்.
இதையும் படிங்க: எப்பவும் நான்தான் கெத்து!.. சம்பளத்தில் விஜயை தாண்டிய ரஜினி!.. நிரூபித்த சூப்பர்ஸ்டார்
வனிதா அக்கா ஏற்கனவே ஜோவிகா வெளியேறிய போதே அப்படிலாம் எதுவும் ஆகலை. அப்படி நடந்து இருந்தா எனக்கு கால் வந்து இருக்கும் என உருட்டிய கதை ரசிகர்கள் அறிந்தது தான். அதுமட்டுமல்லாமல் அர்ச்சனாவையும் சரி, பிரதீப்பையும் சரி அவர் சப்போர்ட் செய்ததே இல்லை என்பதால் மாயா தோற்ற கடுப்பில் பேசி இருக்கிறார் எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…