Connect with us

Bigg Boss

அப்படி போடு… Bullygang-ல் காலியான ஒரு பக்கா விக்கெட்… மிஸ்ஸான பூர்ணிமா..

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசனின் இந்த வார எவிக்‌ஷனுக்கு பலரும் ரொம்ப நாட்களாக காத்திருந்தனர். கிட்டத்தட்ட மொத்த ரசிகர்களும் இரண்டு பேரை தூக்க திட்டம் போட்டு காயை நகர்த்தனர். அதில் ஒன்று நடந்து இருக்கும் நிலையில் தற்போது எவிக்‌ஷன் ரிசல்ட்டால் ரசிகர்கள் செம ஹாப்பி மூடில் இருக்கிறார்கள். 

ரெட் கார்ட் கொடுத்து ப்ரதீப் ஆண்டனியை வெளியேற்றிய பின்னர் கமல்ஹாசன் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தார். கிட்டத்தட்ட ரசிகர்கள் முதல் பழைய போட்டியாளர்கள் வரை அனைவருமே இதை தப்பான முடிவாக குரல் கொடுத்தனர்.

இதையும் படிங்க: புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?

அதனால் ப்ரதீப்பின் ரெட் கார்ட் ரத்தாகும் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால் கமல் வரும் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் தீர்ப்பு கொடுத்தது சரி தான். தீர விசாரித்து கொடுத்த தீர்ப்பு தான் இது. ஆனால் குற்றம் சொல்லியவர்கள் ஒன்னும் யோக்கியம் இல்லை.

அவர்கள் குணாதிசயம் வெளிவரும் எனப் பேசி இருந்தார். இதனால் ப்ரதீப்பின் ரீ எண்ட்ரி கண்டிப்பாக நடக்காது என முடிவாகி விட்டது. சரி அதுக்கூட பரவாயில்லை ரசிகர்கள் ஆசைக்காக எவிக்‌ஷனாவது நடக்குமா என ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!

இவரின் எவிக்ட் ஆகும் காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த எவிக்‌ஷனால் மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு இது பெரிய அடியாக இருக்கும். ஐஷு பின்னால் ஜல்சா செய்து கொண்டு திரிந்த நிக்சனின் கேமில் இனியாவது மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading

More in Bigg Boss

To Top