Categories: Bigg Boss latest news

ஸ்வீட் ஹார்ட்டைத் தூக்கிச் சாப்பிட்ட பெருசு… 2வது நாள் வசூலைப் பாருங்க…

திரையரங்குகளில் நேற்றுமுன்தினம் ஸ்வீட் ஹார்ட், பெருசு உள்பட பல படங்கள் வெளியாகின. இந்தப் படங்களில் பெருசு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. ஏ படம் என்றாலும் அது பெரிய அளவில் விரசம் இல்லை. காமெடி. ஜாலி என்டர்டெய்ன்மென்ட்தான். பாசிடிவான விமர்சனங்கள் வந்தபோதும் ஒருசிலர் நெகடிவாகப் பேசினர்.

அதே போல ஸ்வீட் ஹார்ட் படத்தைக் கழுவி கழுவி ஊற்றினர். யுவன் தயாரித்துள்ள இந்தப் படம் முதல் நாளைப் போலவே 2வது நாளும் வசூலித்துள்ளது. ஆனால் பெருசு படம் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தாலும் கூட துளியும் விரசம் இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம். இவர் ஒரு சின்ன கதையை வச்சிக்கிட்டு படம் முழுக்க கலகலப்பாக எடுத்து இருக்கிறார். பெண்களும், குடும்பத்தினரும் பார்க்கும் வகையில் படம் எடுக்கப்பட்டு இருப்பதுதான் படத்தின் சிறப்பு.

‘ஏ’ படம்தான். என்றாலும் ஆபாசமோ, ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளோ படத்தில் இல்லை. இதுதான் படத்தின் சிறப்பம்சம். இதனால்தான் இந்தப் படம் குடும்பத்துடன் பார்த்து குதூகலிக்கும் படமாக மாறி விட்டது.

படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஷ்காந்த், தீபா ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் சில சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் மனதை வருடுகிறது. அந்த வகையில் படத்தில் காமெடி மட்டும் இல்லாமல் எமோஷனலாகவும் உள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள் இதை சிறந்த ஃபீல் குட் படம் என்கிறார்கள். அவர்கள் சொன்னதுக்கு ஏற்ப படமும் வசூலில் முந்திக் கொண்டுள்ளது. 2நாள் வசூல் விவரம் பாருங்க. ஸ்வீட் ஹார்ட் படத்தின் முதல் நாள் இந்திய அளவில் வசூல் 35 லட்சம். 2வது நாள் இந்திய அளவில் வசூல் 35 லட்சம். ஆக மொத்தம் 70 லட்சம். ஆனால் பெருசு படத்தின் முதல் நாள் இந்திய அளவில் கலெக்ஷன் 53 லட்சம். 2வது நாளில் 57 லட்சம். ஆக மொத்தம் 1.1கோடி.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v