Categories: latest news

Biggboss Tamil: பவித்ராவிடம் அத்துமீறும் ரானவ்… பிக்பாஸ் தமிழில் இப்படி ஒரு காட்சியா? வைரலாகும் வீடியோ!..

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சிகள் போட்டியாளரான ரானவ் சீரியல் நடிகை பவித்ரா ஜனனியிடம் அத்துமீறும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாக பிக் பாஸ் தமிழ் சீசன்களில் காதல் மிகப்பெரிய அளவில் கன்டென்ட் ஆக பயன்படுத்தப்படும். அதை வைத்து அந்த ஜோடி பைனல் வரை செல்ல முயற்சி செய்து அதில் சிலர் வெற்றியும் கண்டு விடுவர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசனில் இதுவரை எந்த காதல் ஜோடியும் உருவாகவில்லை.

இதையும் படிங்க: அனிருத் கொடுத்த அட்வைஸ்!… ஆர்.ஜே பாலாஜிக்கு கிடைத்த சூப்பர் படம்… இப்படி ஓபனா சொல்லிட்டாரே?…

கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்கில் சிலர் காதலை கண்டெண்ட்டாக வைத்து நடித்து வந்தனர். அந்த வகையில் பவித்ரா மற்றும் ரானவ் இருவரும் விளையாட்டாக காதலிப்பது போல சில காட்சிகளில் நடித்ததையும் பார்க்க முடிந்தது.

ஆனால் அதை தொடர நடிகை பவித்ரா விரும்பவில்லை. இருந்தும் வார இறுதியில் எபிசோட்டில் ரானவ் மற்றும் பவித்ராவுக்கு கிளாப்ஸ் கிடைக்க அதை தொடரலாம் என ரானவ் பவித்ராவிடம் ஐடியா கொடுத்திருக்கிறார். ஆனால் பவித்ரா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார்.

இதையும் படிங்க: கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலாவுக்கு… அடுத்த அறிக்கையுடன் வந்த பிரபல நடிகர்..

இந்நிலையில் இன்றைய காலை லைவ் நிகழ்ச்சியில் பவித்ரா தன்னுடைய போட்டியாளர்களுடன் சோபாவில் உட்கார்ந்து இருக்க, கைப்பிடியில் உட்கார்ந்து இருக்கும் ரானவ் அவரை தவறான இடத்தில் பார்ப்பதும், அதில் பதறும் பவித்ரா உடனே தன்னுடைய உடையை சரிசெய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

அவர் சௌந்தர்யாவின் கையை பார்ப்பது போல இருந்தாலும் அருகில் இருக்கும் பவித்ராவிற்கு உடன்படாத ஒரு விஷயத்தை ரானவ் தொடர்ந்து செய்து கொண்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையாவது விஜய் சேதுபதி கண்டிப்பாக என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரானவ் வீடியோவுக்கு: https://x.com/Ynotme21897/status/1858395749408817594

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily