பிக்பாஸ் சீசன் 10 வெளியான சூப்பர் அப்டேட்!... இனிமே மாஸா இருக்குமே?
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் அடுத்த சீசன் அறிவிப்பு வந்துவிட்டது.
10 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது தமிழ் பிக்பாஸ் சீசன். முதல் சீசன் பெரிய அளவில் பிரம்மாண்டம் இல்லாமல் தொடங்கப்பட்டாலும் அதில் கலந்துக்கொண்ட ஓவியாவிற்கு கிடைத்த வரவேற்பு அதிகம் தான்.
அதை தொடர்ந்து ஒவ்வொரு எபிசோட்டிலும் ரசிகர்கள் தங்களுக்கென ஒரு வின்னரை செலக்ட் செய்து அவர்களுக்காகவே நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். கடந்த இரண்டு சீசன்களாக கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சீசனில் நிறைய சீரியல் பிரபலங்கள், இன்ஃப்ளூயன்சர்கள் உள்ளே வந்தனர். அதிலும் பார்வதி, கம்ரூதின் காதல் ஒரு பக்கம் சர்ச்சையானது. இதை தொடர்ந்து போட்டியில் சாண்ட்ராவை தள்ளிய பார்வதி பலராலும் விமர்சிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து பலரும் தட்டிக்கேட்டு ஓவர் கெட்ட வார்த்தை என இதுவரை பிக்பாஸ் ரசிகர்கள் பார்க்காத விஷயங்களை பார்த்தனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் சாதாரண மக்களை களமிறக்கும் முடிவில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வந்துள்ளது.
அந்த வகையில் பிக்பாஸ் காமன் மேன் என்ற ஷோ வர இருக்கிறது. இதற்கான ப்ரோமோவை விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். இதில் வெல்லும் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லலாம். இந்த நிகழ்ச்சி பிரபலம் ஆனால் அந்த போட்டியாளருக்கு இது மேலும் ப்ளஸாக இருக்கும்.
உள்ளே வர நட்சத்திர போட்டியாளருக்கு இது செம டஃப் போட்டியாகவும் இருக்கும். இதற்கு முன்னர் ஜூலி, தனலட்சுமி, தாமரை என சாதாரண போட்டியாளர்கள் உள்ளே வந்தாலும் சோபிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
