Categories: Bigg Boss latest news television

பிக்பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானாம்… செல்லாது செல்லாது… கதறும் ரசிகர்கள்..!

Bigg Boss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் 7ன் முதல் வார இறுதி வந்துவிட்டது. கமல்ஹாசன் தொகுப்பில் வார இறுதியில் அவர் கொடுக்கும் பஞ்ச்க்கு ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் இந்த வார வீக் எண்ட்டில் என்னெல்லாம் சுவாரஸ்யம் நடக்க இருக்கும். அதற்கு முன் முதல் எலிமினேட் ஆன போட்டியாளர் குறித்த தகவலும் வெளியாகிவிட்டது.

தமிழில் ஹிட் ரியாலிட்டி ஷோவாக இருக்கும் பிக்பாஸ். இந்த சீசன் கடந்த வாரம் தொடங்கியது. கிட்டத்தட்ட பெரிய புகழ் முகங்கள் யாரும் இல்லை. பெரும்பாலும் சீரியல் நட்சத்திரங்கள், சின்ன நடிகர்களே களமிறங்கி இருக்கும் இந்த சீசன் டல் அடிக்கும் என ரசிகர்கள் நினைத்தனர்.

இதையும் படிங்க:விலைபோகாத விஜய் சேதுபதி படம்!.. ஒரே ஒருத்தர் வச்ச நம்பிக்கை!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!.

அவர்கள் இல்லைனா என்ன நான் இருக்கேன் என்ற ரீதியில் பிக்பாஸ் டீம் களமிறங்கி விட்டது. அந்த வகையில் முதல் நாளே 6 போட்டியாளர்களை சின்ன வீட்டுக்கு மாற்றியது. அவங்க தான் சமைக்கணும். இரண்டு டாஸ்க் வச்சி தோத்தா பிக்பாஸ் வீடு செய்யும் மற்ற வேலைகளை எனக் கூறப்பட்டது.

ஆனால் அந்த டாஸ்க்கிலும் ஸ்மால் பிக்பாஸ் வீடு தோற்று மொத்த வீட்டினை பராமரித்து வந்தனர். அந்த வகையில் வந்த முதல் நாளே இரண்டு எலிமினேஷன் நடத்தப்பட்டது. பிக்பாஸ் வீட்டினர் அவர்களுக்கு உள்ளேயே நாமினேட் பண்ணிக்க வேண்டும். 

இதையும் படிங்க:சிவாஜியின் சூப்பர்ஹிட் படமான தில்லானா மோகனாம்பாள்… ஆனா உண்மையில் யார் நாதஸ்வரம் வாசித்தது தெரியுமா?

ஸ்மால் டீம் அவர்களுக்குள் பண்ணிக்க வேண்டும். அந்த வகையில் இந்த வார நாமினேட் லிஸ்ட்டில் அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், ரவீனா தாஹா, யுகேந்திரன், ப்ரதீப் ஆண்டனி, பவா செல்லத்துரை இருந்தனர். இதில் முதல் எலிமினேஷனாக அனன்யா ராவ் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இவர் வெளியேறும் எபிசோட் நாளை ஒளிபரப்பப்படும். மேலும், ஜோவிகா கல்வி குறித்த பிரச்னை, ப்ரதீப் குறித்து விஜய் பேசிய முரட்டுத்தனமான பேச்சு குறித்து இன்றைய எபிசோட்டில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Published by
Shamily