Connect with us
biggboss tamil

Bigg Boss

ஜாக்குலினிடம் அசிங்கமாக பேசிய ராணவ்… சண்டைக்கு வந்த சவுந்தர்யா… பிக்பாஸ் ஆட்டம்…

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8ல் இன்றைய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டியாளரான ராணவ்,வ ஜாக்லினை தகாத வார்த்தை பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடக்கத்தில் இருந்தே டல்லடித்து வந்தது. பெரும்பாலும் எந்த டாஸ்குகளும் இல்லாமல் போட்டியாளர்களும் பெரிய அளவில் கன்டென்ட் கொடுக்காமல் டிஆர்பி பெரிய அளவில் அடி வாங்கியது. இதை சரி செய்ய தயாரிப்பு குழு கிரியேட்டிவ் டீமை மாற்றியது.

இதையும் படிங்க: மரணபயத்த காட்டிட்டான் பரமா! ‘அமரன்’ படத்தால் பீதியில் இருக்கும் சிவகார்த்திகேயன்

அதைத் தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது. போட்டியாளர்களின் பெயர் கொண்ட பொம்மைகள் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இன்னொரு போட்டியாளரின் பெயர் கொண்ட பொம்மையை ஒரு போட்டியாளர் எடுத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும்.

இதில் கடைசி வரும் பொம்மை பெயர் கொண்ட போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். இது பல சீசன்களில் நடந்து வரும் டாஸ்க் என்பதால் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இதனால் இந்த வாரம் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரபரப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் இன்றைய டாஸ்கிலும் சில பரபரப்புகள் நடந்திருக்கிறது. காலை வெளியான முதல் ப்ரோமோவில் ராயன் மற்றும் ராணவ் இருவரும் அடித்துக்கொண்ட நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கைகலப்பில் ஏற்பட்ட ராயனுக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோலாகலமாக நடந்த வெற்றிவசந்த் – வைஷ்ணவி திருமணம்… வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர் ராணவ்  ஜாக்லினை பார்த்து அசிங்கமான வார்த்தை ஒன்றை பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ப்ரோமோவிலும் அந்த காட்சியிடம் பெற்று வார்த்தை மியூட் செய்யப்பட்டிருப்பதால் தற்போது ரசிகர்களுக்கு பரப்பரப்பை ஏற்படுத்தியது.

இதை அருகில் இருந்து கேட்கும் சௌந்தர்யா கோபத்தில் ராணவிடம் சண்டைக்கு போவதும் புரோமோவில் இடம் பெற்றிருக்கிறது. இதனால் பல நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் தமிழ் சீசன் 8 எபிசோட் அனலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சண்டையின் முழு தகவலை லைவிலும், இன்றைய இரவு எபிசோடிலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புரோமோவிற்கு: https://x.com/vijaytelevision/status/1862021159371608440

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top