Connect with us
biggboss tamil

Bigg Boss

Biggboss Tamil: உன் கேரக்டரை பண்ண துப்பு இல்லை… சவுண்ட் சரோஜாவாக மாறிய சவுந்தர்யா… ஆட்டம் பத்திக்கிச்சு…

Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கி இன்றுடன் 38 நாட்கள் கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களைப் போல இல்லாமல் இந்த சீசன் ஆரம்பத்திலிருந்து போர் அடிக்க பலரும் நிகழ்ச்சியை பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கவில்லை.

இதனால் தற்போது பிக் பாஸில் கடந்த இரண்டு வாரங்களாக வார டாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பள்ளிக்கூடம் நடந்து வருகிறது. அதில் தலைமை ஆசிரியராக வர்ஷினி, ஆசிரியராக ஜாக்லின், வாட்ச்மேன் ஆக சிவகுமார் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: Jyothika: இப்படியெல்லாம் மாமனார் வீட்ல இருக்க முடியுமா ? மும்பையில் படு ஜாலியா சுத்தும் ஜோதிகா

மற்ற போட்டியாளர்கள் பள்ளி படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளாக நடித்து வருகின்றனர். காலையில் இருந்து வெளியான புரோமோக்களில் தலைமையாசிரியர் வர்ஷினியை விமர்சித்து போட்டியாளர்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதுபோல அதற்கு அடுத்த வெளியான ப்ரோமோவில் ஜாக்லின் நடத்தும் பாடத்தின் தனக்கு விருப்பமில்லை என கூறி சத்யா எழுந்து சென்றதையும் பார்க்க முடிந்தது. அதை தொடர்ந்து வெளியான மூன்றாவது புரோமோவில் சத்யா மற்றும் ரானவ் இருவரும் சண்டையிட்டு கொள்கின்றனர்.

அதைத்தொடர்ந்து சத்யா மற்றும் பவித்ரா இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றனர். மூன்று ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டு விட்ட நிலையில் இன்றைய நாட்களில் இவ்வளவுதான் கண்டன்டா என ரசிகர்கள் கவலை கொண்டனர்.

இதையும் படிங்க: உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நான்காவது ப்ரோமோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் மீண்டும் சௌந்தர்யா மற்றும் ரானவுக்கு இடையே சண்டை வெடித்து இருக்கிறது. காதல் கன்டெண்ட்டை வைத்து சண்டை போட்டு கொண்டுள்ளனர்.

சவுந்தர்யா பக்கத்துல உங்காந்தா காதலா என ரியாவிடம் எகிறிக்கொண்டு ரானவிடம் கத்திக்கொண்டு இருக்கிறார்.  நடுவில் உன் கேரக்டரை பண்ண துப்பு இல்லை எனவும் பேசுகின்றானர். அன்ஷிதா இது வேற மாதிரி போகுது எனச் சொல்ல அங்கு வரும் வர்ஷினி எல்லாரையும் கத்தி அமைதி படுத்துகிறார். இது ரியல் சண்டையா இல்லை டாஸ்கில் நடந்ததா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ப்ரோமோவைக் காண: https://x.com/vijaytelevision/status/1856660784149143617

 

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Bigg Boss

To Top