biggboss tamil9
Biggboss Tamil9: விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஹிந்தியில் பெயர் பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த எட்டு சீசன்களாக தமிழில் ஒளிபரப்பப்பட்டு வெற்றியைப் பெற்றிருக்கிறது. முதல் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடைசி சீசனில் அவருக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இதனால் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க உள்ளே வந்தார் நடிகர் விஜய் சேதுபதி. கமல் போல் அமைதியாக கேள்வி கேட்காமல் அதிரடியாக இறங்கி ஆடிய விஜய் சேதுபதி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் பலரிடம் விமர்சனங்களையும் குவித்து வந்தார்.
இதனால் அடுத்த சீசன் அவர் வருவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருடன் ஒன்பதாவது சீசன் குறித்த முதல் கட்ட புரோமோ நேற்று வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகப்படும் எனக் கூறப்படுகிறது.
எப்போதும் போல இல்லாமல் இந்த முறை விஜய் டீவி புராடக்ட்கள் குறைவு தான் எனக் கூறப்படுகிறது. இந்த முறை விஜய் டிவி சீரியல்களில் ஹீரோவாக நடித்த வினோத் பாபு போட்டியாளராக களம் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் காமெடி, நடிப்பு என ஏற்கனவே பிரபலம் என்பதால் நல்ல கண்டெண்ட் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. அவரின் திரைப்படத்தில் நடித்த உமைர் தற்போது குக் வித் கோமாளியில் நல்ல என்டர்டைன்மெண்ட் கொடுத்து வருகிறார்.
இதனால் அவருக்கும் இந்த சீசனில் பங்கு பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. ஜீ தமிழில் அறிமுகமான ஷபானா சன் டிவி சென்று தற்போது விஜய் டிவிக்கு வந்திருக்கிறார். அவரிடம் பெரிய வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் அவரும் இந்த சீசனில் உள்ளே வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது மட்டும் அல்லாமல் தொகுப்பாளனி மற்றும் நடிகையான வெண்பா கேரக்டரில் நடித்த ஃபரீனாவும் நிகழ்ச்சிக்குள் வர இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் சமீபத்தில் முடித்த பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்து வந்த நேகாவும் உள்ளே வர வாய்ப்பு உண்டாம்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகர் அஸ்வின் அப்பொழுது ரசிகர்களிடம் நல்ல புகழை பெற்றார். அதன் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் 50 கதையை கேட்டு தூங்கினேன் என பெருமையாக அவர் பேசினார்.
இது அவருக்கே பிரச்சனையாக மாறி ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டத்துடன் ரசிகர்களிடம் நெகட்டிவ் விமர்சனத்தை குவித்ததால் அவர் உள்ளே வந்து மேலும் பரபரப்பாக பேசப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வேயர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொகுப்பாளினி பார்வதிக்கும் இந்த முறை வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…