Categories: Bigg Boss latest news

Thuglife collection: இந்தியன்2, ரெட்ரோ பரவாயில்லயே… தக்லைஃப் வசூல் இப்படி ஆகிடுச்சே!

மணிரத்னம், கமல், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் என பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இணைந்த படம் தக் லைஃப். படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

புரொமோஷன் படு ஜோராக நடந்தது. படத்திற்கு ஏகப்பட்ட விமர்சனம், கமலின் கன்னட மொழி குறித்த பேச்சால் சர்ச்சை என பல சவால்களுக்கு இடையே படம் நேற்று வெளியானது. இந்தப் படம் பெரிய அளவில் ஹிட் அடிக்கும். நிச்சயம் முதல் நாளில் 50 கோடி கலெக்ஷன் இருக்கும் என்றார்கள்.

இதற்கு ரெட்ரோ படம் எவ்வளவோ பரவாயில்லை. தொடர்ந்து சூர்யா படத்தைத் தோல்வி என்றார்கள். சிங்கம் படத்தின் வெற்றிக்குப் பிறகு எந்தப் படமும் ஹிட் அடிக்கவில்லை என்றார்கள். ஆனால் ரெட்ரோ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஆவரேஜ் ரகம் என்றார்கள். அந்த வகையில் சூர்யாவின் படம் எவ்வளவோ பரவாயில்லை. ஏன்னா முதல் நாள் வசூல் கமலின் தக் லைஃப் பட வசூலை விட பரவாயில்லை என்று சொல்லலாம். அந்த வகையில் தக் லைஃப் மற்றும் ரெட்ரோ படங்களின் முதல் நாள் வசூலை ஒப்பிடலாம்.

எந்த ஒரு பெரிய ஹீரோவுக்கும் அதுவும் கமல் போன்ற லெஜண்ட்களுக்கு முதல் நாள் வசூல் மாஸாக இருக்க வேண்டும். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலும், மணிரத்னமும் இணைந்துள் ளார்கள். அப்படி இருந்தும் ஏன் இந்தளவு படத்தின் வசூல் குறைந்துள்ளது என்று புரியாத புதிராக உள்ளது. பாட்டு ஹிட். பின்னணி இசை சூப்பர் என்கிறார்கள்.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இனி போகப் போகத் தான் ஹிட் அடிக்குமா? படத்தில் கமல், சிம்பு நடிப்பு சூப்பர்னு சொல்றாங்க. சிம்புதான் ஒரு படி மேல என்றும் சொல்கிறார்கள். லேட் பிக்கப் ஆனால் சரிதான். ஆனால் சமூகவலைதளங்களில் புளூசட்டை மாறன் மாதிரி ஒரு சிலர் படத்தைக் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். இப்போது படத்தின் முதல் நாள் வசூலைப் பாருங்க.

சேக்நில்க் அறிக்கையின் படி, இந்தியன் 2 முதல் நாள் இந்திய அளவில் வசூல் 25.6கோடி. ரெட்ரோ படம் ரெட்ரோ படம் 19.25கோடி. ஆனால் நேற்று வெளியான தக் லைஃப் படம் இந்திய அளவில் முதல் நாள் 17 கோடியைத் தான் வசூலித்துள்ளது.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v