Categories: Bigg Boss latest news

என்ன ஆள் அடையாளமே தெரியல…. பிக் பாஸ்க்கு அப்புறம் தான் இப்டியா ?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் பிரபல காணா பாடகர் இசைவாணி.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ். கடந்த நான்கு சீசனும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது 5ஆம் சீசன் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த சீசன்யில் கலந்து கொண்ட காணா பாடகர் இசைவாணி சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றட்டார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இசைவாணி, முன் இல்லாததை விட தற்போது அதிக அளவில் போட்டோஷூட் செய்து தன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு தன் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கருப்பு புடவையில் வெஸ்டர்ன் ஸ்டைலில் அவர் எடுத்து கொண்ட புகைப்படங்களை தன் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியலேயே பிக் பாஸ்க்கு அப்புறம் தான் இப்டி மாறிட்டீங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
sam