×

க்யூட்டான புரபோஸல்... பாய்பிரண்ட் செயலால் நெகிழ்ந்த `பிகில்’ நடிகை

`பிகில்’ நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு அவரது காதலர் ஜோமோனுடன் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. 
 
`பிகில்’ நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு அவரது காதலர் ஜோமோனுடன் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. 

பிகில் படத்தில் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வரும் சிங்கப் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். மலையாளத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான ஸ்வராஜிண்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம் படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ரெபா, அதன் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துவிட்டார். 


இவர், கேரளாவைச் சேர்ந்த ஜோமோன் ஜோசப் என்பவரைக் காதலித்து வந்தார். ரெபா நேற்று (பிப்ரவரி 4) பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாளில் ரெபாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஜோமோன். லாக்டவுனால் கடந்த சில மாதங்களாக ரெபாவைப் பார்க்க முடியாத சூழல் இருந்திருக்கிறது. இந்தநிலையில், பிறந்தநாளை ஒட்டி ரெபாவை சர்ப்ரைஸாக சந்தித்த ஜோமோன், முழங்காலிட்டபடி தன்னைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட்டு புரபோஸ் செய்திருக்கிறார். இதில், நெகிழ்ந்துபோன ரெபா உடனே ஓக்கே சொல்லி கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனால், விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளும் என்கிறார்கள். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்.  

From around the web

Trending Videos

Tamilnadu News