×

பிக்பாஸ் 4 விரைவில்... தொகுப்பாளரை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ்நாட்டு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனி முத்திரைப் பதித்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதற்குக் காரணம் அதைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன்தான். அதனால் மற்ற மொழிகளில் ஒவ்வொரு சீசனுக்கும் வேறு வேறு பிரபலங்கள் தொகுத்து வழங்கினாலும் தமிழில் கடந்த மூன்று சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

 

கொரோனா ஊரடங்கினால் குறித்த தேதியில் துவங்கமுடியாமல் தாமதமாவதால் பிக்பாஸ்சீசன் 4 ஐ கமல் தொகுத்தளிக்க மாட்டார் என வதந்திகள் பரவியது. இது குறித்து விளக்கமளித்த நெருங்கிய வட்டாரம், இப்பொழுது தான் கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டு சீரியல் ஷூட்டிங் நடத்துவதற்கான அனுமதி வழங்கியுள்ளனர்.  எனவே கூடிய விரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான திட்டம் போட்டு வேலைகள் துவங்கும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்ப்போது பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனமான "எண்டிமால் நிறுவனம்" ஜூலையில் ஒளிபரப்பு தொடங்கிடவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், தற்போது இருக்கிற சூழலுக்கு சாத்தியப்படாது . எனவே கொரோனா லாக்டவுன் ஆகஸ்ட்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என நம்புவதால் செப்டம்பரில் ஒளிபரப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். எனவே விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வரும். பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை நிச்சயம் கமல் சார் தான் தொகுத்து வழங்குவார் என்று தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News