×

அண்ணாத்த படத்தில் பிகில் நடிகர்...ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்...

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அதன் பின் கொரொனோ பரவலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்கும் காட்சிகள் சென்னையில் ஸ்டுடியோவில் படம்பிடிக்கப்படவுள்ளது. அதன்பின் ஜனவரி மாதம் முதல் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத்தெரிகிறது.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் இப்படத்தில் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே, அண்ணாத்தே படத்தில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடித்து வருகிறார். எனவே, இவர் சைடு வில்லனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் தமிழில் பிகில் படத்தில் ஜாக்கி ஷராப் நடித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News