×

பர்த்டே பேபி விஷ்ணு விஷாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலி!

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பின்னர் விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்து கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

 

அதையடுத்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் நெருங்கி பழகி காதலிப்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். விரைவில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக ஜுவாலா கட்டா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இருந்தாலும் விஷ்ணு விஷாலுக்கு தன் மகன் மீது உள்ள பாசம் கொஞ்சமும் குறையவில்லை. அடிக்கடி அவரை சந்தித்து விடுவார்.

கொரோனா லாக்டனில் கூடதன் மகனை பிரிந்து 75 நாட்களுக்கு பிறகு சந்தித்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று விஷ்ணு விஷால் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணிய காதலி  ஜுவாலா கட்டா திடீர் விசிட் அடித்து கேக் வெட்டி வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை விஷ்ணு விஷால் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

View this post on Instagram

My bday suprise...😁 @gutta_jwala

A post shared by vishnu vishal (@iamvishnuuvishal) on

From around the web

Trending Videos

Tamilnadu News