×

பிறந்த நாளை தனிமையில் கொண்டாடிய ஓவியா.. சரக்கு இல்லாமல் வருத்தமாக உள்ளது!

நடிகை ஓவியா நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

 

அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ஓவியா தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடினேன் என்பதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். லாக்டவுன் காரணாமாக வீட்டில் தனிமையில் இருப்பதால் தானே பிறந்தநாள் கேக் செய்ததாக கூறியுள்ள அவர் அதன் புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.

"ஹே கைஸ், வாழ்த்தியதற்கு நன்றி. என்னுடைய பிறந்தநாள் கேக்கை நானே பேக் செய்தேன். லவ் யூ ஆல்" என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பேட்டியில் அவர் தனது பிறந்தநாளுக்கு வைன் வாங்க முடியவில்லை என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அவர். தான் அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராமில் இணைவதாக தெரிவித்துள்ளார் அவர்.

Quarantineல் இருப்பதால் அதிக நேரம் கிடைத்துள்ள நிலையில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார் . கடைசியாக களவாணி 2 படத்தில் நடித்திருந்த ஓவியா அதனை தொடர்ந்து தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். பிளாக் காபி என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் அவர் சன்னி வெயின் ஜோடியாக நடிக்கிறார்.

அந்த படத்தில் அமெரிக்காவில் இருந்து கேரளா வந்து நடிகையாக முயற்சிக்கும் பெண்ணாக நடிக்கிறார் ஓவியா.

View this post on Instagram

No guts,no glory!

A post shared by Oviya (@happyovi) on

From around the web

Trending Videos

Tamilnadu News