Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தலைக்கு பிறந்த நாள் – டிவிட்டரில் டிரெண்டிங் முதலிடத்தில்  #HBDDearestThalaAJITH

நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

fb474595efb401339d99eea75509206e

ஏற்கனவே, படம் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என ஆர்வமுடன் காத்திருந்தனர். மேலும், தனியாக ஒரு டிபியை உருவாக்கி டிவிட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அஜித் அதை விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அஜித்துக்கு நாளை (மே 1ம் தேதி) பிறந்த நாள் ஆகும். இதைத்தொடர்ந்து டிவிட்டரில்  #HBDDearestThalaAJITH என்கிற ஹேஷ்டேக்கின் மூலம் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. தற்போதுவரை 8 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top