×

பிஸ்கோத்: இது யார் பட டைட்டில் தெரியுமா?

பிரபல இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கிய ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்த சந்தானம் தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்

 

பிரபல இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கிய ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்த சந்தானம் தற்போது அவர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் ’பிஸ்கோத்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டிலே வித்தியாசமாக இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது

ராதான் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் இந்த படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வரும் 14-ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web

Trending Videos

Tamilnadu News