rkav
ஷாருக்கானுக்குப் பிறகு விஜய் தான் அதிகமாக டேக்ஸ் கட்டியிருக்காங்க. இதுபற்றி என்ன சொல்றீங்கன்னு பிரபல வலைப்பேச்சு பிஸ்மியிடம் கேட்டாங்க. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
sharukhan
உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். தமிழ்சினிமாவே கறுப்புப் பணத்தில் தான் இயக்குகிறது. அது படத்துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். ஒருத்தர் 3 கோடி ரூபா சம்பளம் வாங்கிட்டு அவர் 2000வாக்கில் ஒரு பெரிய ஹீரோ. 3 கோடி சம்பளமா வாங்கிட்டு 30 லட்சத்தைக் கூட வெள்ளையா வாங்கல. வெறும் 24 லட்சத்தைத் தான் செக்கா வாங்குறாரு.
இதை ஏன் சொல்றேன்னா அந்தத் தயாரிப்பாளர் செக் புக்கையே எங்கிட்ட காட்டுனாரு. இவருக்கு 3 கோடி சம்பளம் கொடுக்கிறேன். 24 லட்சத்தைத் தான் செக் பேமென்டாவே வாங்கினாருன்னு சொல்றாரு. இதை ஏன் சொல்றேன்னா கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுமே கறுப்புப் பணத்துல தான் கொழிச்சிக்கிட்டு இருக்காங்க.
10 பர்சன்ட தான் கணக்குலயே காட்டுறாங்க. 90 சதவீதம் கருப்புப் பணம் தான். இப்படி இருந்த தமிழ்சினிமா கடந்த சில வருடங்களாக தன்னோட போக்கில மாறிக்கிட்டு இருக்கு. தினக்கூலிகளாக உள்ள தொழிலாளர்களுக்குக் கூட ஜி பே ல போட்டுவிட்டு இவங்கக் கணக்கைக் காட்டுறாங்க.
முக்கியமாக சம்பள விவகாரத்தில் இப்படி மாற்றம் வந்துருக்கு. அப்படி மாறியதால் நடிகர் விஜயும் தன்னோட சம்பளம் முழுவதையுமே வெள்ளையாகவே வாங்குறாரு.
அப்படி வாங்கினதால தான் அவர் 80 கோடி ரூபாயை டேக்ஸா கட்டியிருக்காரு. ஷாருக்கான் 92 கோடி கட்டியிருக்காரு. அதுக்கு அடுத்த இடத்துல விஜய் இருக்காரு. இவருக்குப் பிறகு தான் பல கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நடிகர்களும் இருக்காங்க.
Also read: நெருங்கும் பிக்பாஸ் சீசன்8… குக் வித் கோமாளியில் காலியான ரெண்டு விக்கெட்… எலிமினேஷன் அப்டேட்
அதே நேரம் விஜய் மட்டும் தான் 200 கோடி சம்பளம் வாங்குறாரா? அவருக்கு நிகராக அஜீத், கமல், ரஜினி இருக்காரு. இவங்க எல்லாம் சம்பளம் வாங்குறாங்க. ஆனா இந்தப் பட்டியல்ல இவங்க எல்லாம் வரலயேன்னு கேள்வியும் எழுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…