பைசன் படத்திற்கு சிக்கல்.. ஆனா Dude கிரேட் எஸ்கேப்!.. என்ன நடக்கப்போகுதோ!...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் பைசன். துருவ் நடிப்பில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகியிருந்தாலும் அவை தன்னுடைய படங்களாகவே கருதவில்லை என துருவ் சொல்லி இருக்கிறார். என் முதல் படமான ஆதித்ய வர்மா தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது. இரண்டாவது படத்தில் என் அப்பாதான் ஹீரோ. எனவே, பைசனை என்னுடைய முதல் படமாக நினைக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய 100 சதவீதம் கடுமையான உழைப்பை போட்டிருக்கிறேன். மாரி செல்வராஜ் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள்’ என இப்படத்தின் புரமோஷன் விழாவில் பீலிங்காக பேசினார் துருவ் விக்ரம்.
தென் மாவட்டத்தை சேர்ந்த மணத்தி கணேசன் என்கிற கபடி வீரரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாக வைத்து பைசன் படத்தை உருவாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். தீபாவளியை முன்னிட்டு இப்படம் வருகிற 17-ம் வெளியாகியுள்ளது. UAE சென்சாரில் படம் பார்த்த சில அதிகாரிகள் படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டி இருக்கிறார்கள்.
அதேநேரம் இப்படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் மற்றும் 48 நிமிடங்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. பொதுவாக இவ்வளவு நீளமுள்ள படங்கள் ரசிகர்களை சோர்வடைய வைக்கும். இதற்கு முன் அதிக நீளம் காரணமாகவே பல படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. ஆனால் பைசன் படம் மேக்கிங்கில் நன்றாக வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் இந்த நீளம் படத்திற்கு சிக்கல்தான். என்ன நடக்கப் போகிறது என்பதை அக்டோபர் 17ம் தேதி தெரிந்துவிடும்..
ஆனால் இந்த பிரச்சனை ஹரிஷ் கல்யாண் நடித்து அதே அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகவுள்ள டீசல் படத்திற்கு இல்லை. இந்த படத்தின் மொத்த நீளமே 2 மணி நேரம் 12 நிமிடங்கள்தான். டீசல் திரைப்படம் ஹரிஷ் கல்யாணின் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் இதுவரை சாக்லேட் பாயாக மட்டுமே நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் டீசல் படத்தின் மூலம் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார். டீசல் கடத்தலை பற்றி இப்படத்தில் பேசியிருக்கிறார்கள்.
இந்த இரண்டு படமும் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
