வெளியான ‘பைசன்’ படத்தின் புதிய போஸ்டர்.. துருவ் விக்ரமுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்டா இருக்கும் போல

by Rohini |
bison
X

முதல் படமே நல்ல ஒரு வரவேற்பு: பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்? மேலாதிக்கம் என்ற ஒரு விஷயம் எப்படி தலை தூக்கி ஆடுகிறது என்பதை சாதி ரீதியாக இந்த படத்தின் மூலம் காட்டி ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றார் மாரி செல்வராஜ்.

அதிலிருந்து அவர் எடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் சாதி ரீதியான சில அடிப்படைக் கருத்துக்கள் இருப்பதாகவே தெரிகிறது. அது மட்டுமல்ல மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் ஆகிய இருவருமே சாதி ரீதியிலான படங்களை எடுத்து மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என்ற ஒரு கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. அப்படி இருந்தாலும் இவரின் ஒவ்வொரு படைப்புகளுமே மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது.

அடுத்தடுத்த படங்கள்: தனுஷ் நடித்த கர்ணன் எந்த அளவுக்கு பாராட்டை பெற்றது என அனைவருக்கும் தெரியும். அதைப்போல உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். அதிலும் வடிவேலுவின் கதாபாத்திரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் அதுவரை ஒரு நகைச்சுவை நடிகராகவே வடிவேலுவை பார்த்த மக்களுக்கு இப்படி ஒரு நடிகர் வடிவேலுவுக்குள் இருக்கிறாரா என்ற ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்ட திரைப்படமாக மாறியது. இப்படி அவரின் ஒவ்வொரு படைப்புகளும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து அவருடைய இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் பைசன். இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

பைசன் பட போஸ்டர்: அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். பசுபதி, கலையரசன் போன்ற பல முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எழிலரசு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் பைசன் படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியீட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை கூறியிருக்கிறது பைசன் படக் குழு.


அந்த போஸ்டரில் துருவ் விக்ரம் மாடுகளை வயலில் ஓட்டிச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது .போஸ்டரை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் படத்தை எப்போது காட்டப் போகிறீர்கள். துருவ் விக்ரமை எந்த அளவுக்கு செதுக்கி இருக்கிறீர்கள் என்றெல்லாம் கமெண்ட்களில் கூறி வருகின்றனர். இதற்கு முன் இந்த படத்தின் ஒரு போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தினார் மாரி செல்வராஜ். இப்போது இந்த புதிய போஸ்டரும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது.

Next Story