×

அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பிரமுகர் – வைரல் ஆகும் வீடியோ!

பாஜகவைச் சேர்ந்த சோனாலி போகட் என்ற சட்ட மன்ற உறுப்பினர் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாஜகவைச் சேர்ந்த சோனாலி போகட் என்ற சட்ட மன்ற உறுப்பினர் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனாலி பேகட் டிக்டாக் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர். அதையடுத்து பாஜகவில் இணைந்த அவருக்கு ஹரியானா சட்டசபைத் தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டது. அந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்தார். மேலும் விவசாய சந்தையை ஆய்வு செய்த அவர், அங்கு  உற்பத்தி சந்தை குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்தித்துள்ளார்.

இவர்கள் இருவருக்கும் முன்பே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. சோனாலிக்கு எதிராக சுல்தான் தேர்தலில் வேலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமான சோனாலி தனது செருப்பைக் கழட்டி சரமாரியாக சுல்தானை அடிக்க ஆரம்பித்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் போலீஸ் காரர்கள் சோனாலியைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News