×

அந்தா... இந்தா.. இழுப்பறியில் இருந்த பாஜக தலைவர் பதவி! எல். முருகன் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து செப்டம்பர் 1 தேதி முதல் நீண்ட நாட்களாக தலைவருக்கான இடம் காலியாகவே இருந்தது.
 

அந்த இந்தானு ஒரு வழியாக இன்று பாஜக தலைவராக எல் முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.

15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்டவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் பிஎல் பட்டத்தையும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எல் படிப்பும் முடித்துள்ளார்.

1977-ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி பிறந்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டம் தொடர்பான பிஎச்டி பட்டம் படித்து வருகிறார்.

வானதி சீனிவாசன், பொன் ராதாகிருஷ்ணன், கேடி ராகவன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முன்னணி தலைவர்களின் போட்டிக்கிடையில் முருகன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News