×

பேரன் பேத்தி எடுக்குற வயசுல மூன்றாவது திருமணமா? அமீரை விளாசும் பாஜக எம்.பி

சர்ச்சையாக பேசுவது முதல் முறை அல்ல. மனைவியை பிரிந்தாலும் ஆசாதுக்கு நல்ல பெற்றோராக இருப்போம் என்று ஆமீர் தெரிவித்துள்ளார். 
 
e881731a-c050-432e-a351-dd60f43600a3

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தன் லகான் படத்தில் உதவி இயக்குநராக இருந்த கிரண் ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆசாத் என்கிற மகன் இருக்கிறார்.

திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்திருக்கிறார் ஆமீர் கான். இது குறித்து ஆமீரும், கிரண் ராவும் சேர்ந்து அறிக்கை வெளியிட்டனர். இது ஆமீர் கானுக்கு இரண்டாவது விவாகரத்து ஆகும்.

மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் பகுதியை சேர்ந்த பாஜக எம்.பி.யான சுதீர் குப்தா ஆமீர் கான் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகு முதல் மனைவி ரீனா தத்தாவை பிரிந்தார் ஆமீர் கான். தற்போது ஒரு பிள்ளையுடன் கிரண் ராவை பிரிந்துவிட்டார். தாத்தாவாகும் வயதில் அவர் மூன்றாவது மனைவியை தேடிக் கொண்டிருக்கிறார் என்றார்.

சுதீர் குப்தாவின் பேச்சு ஆமீர் கான் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. அவர் இப்படி சர்ச்சையாக பேசுவது முதல் முறை அல்ல. மனைவியை பிரிந்தாலும் ஆசாதுக்கு நல்ல பெற்றோராக இருப்போம் என்று ஆமீர் தெரிவித்துள்ளார். 

மேலும் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்ட வேகத்தில் லால் சிங் சட்டா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஆமீர். அந்த படப்பிடிப்பு தளத்தில் அவர் கிரண் ராவுடன் சிரித்த முகமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

ஆமிர் கான் அடுத்ததாக நடிகை பாத்திமா சனா ஷேக்கை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று பேசப்படுகிறது. ஆமீர் கானின் தங்கல் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். தங்கல் படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டது. அதனால் ஆமீர் கான், கிரண் ராவ் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று பாலிவுட்டில் அப்போது பேச்சாக இருந்தது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News