சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் என்ன பிரச்னை?.. பிளாக் பாண்டி க்ளியர் பண்ணிட்டாரு!..

 
pandi

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிளாக் பாண்டி இடையே பண உதவி தொடர்பாக  கூறப்பட்ட பழைய சர்ச்சைக்கு பிளாக் பாண்டி தற்போது விளக்கம் அளித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

அங்காடித் தெரு, வேலாயுதம், ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான பிளாக் பாண்டி, சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் பண உதவி செய்ததாகவும், தனக்கு பணத்தைவிட சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியிருந்தார். அந்த வீடியோவால் அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியானது.

 இந்நிலையில், ஜெடூசி படத்தில் நடித்துள்ள பிளாக் பாண்டி, அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசும் போது, சிவகார்த்திகேயன் தனக்கு உதவி செய்தது அவமானப்படுத்தும் நோக்கத்தில் கிடையாது, தான் கஷ்டத்தில் இருப்பதை அறிந்து உதவ முன்வந்த போது எனக்கு பண உதவியை விட நடிப்பதற்கான வாய்ப்புதான் தேவைப்பட்டது என்பதையே  கூறியதாகவும் விளக்கியுள்ளார்.

மேலும், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை பின்னர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து சரிசெய்துவிட்டேன், இருவருக்கும் இடையிலான பிரச்சினை ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டது பழைய சம்பவத்தை மீண்டும் சர்ச்சையாக்க வேண்டாம் , சிவகார்த்திகேயன் பற்றி தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் பிளாக் பாண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

CR  Desk
CR Desk

7960 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web