Blast Box office: பிளாஸ்ட் 21 நாட்களில் செய்த மொத்த வசூல்
அர்ஜூன் நடிப்பில் கடந்த மே மாதம் 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அற்றிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அர்ஜூனுடன் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர். ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பிளாஸ்ட் வெளியாகி 21 நாட்கள் கடந்த நிலையில் அப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. sacnilk இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி 273 காட்சிகள் நடைபெற்ற நிலையில் இந்திய அளவில் மொத்த வசூல் ரூ 56.56 கோடி, நிகர வசூல் ரூ. 49.21 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ 75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மொத்தம் ரூ 13 கோடியில் தயாரான இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த மாதம் இறுதியில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
