ரூ. 300 கோடி வசூல் செய்த பிரம்மாண்ட படங்கள் - இடம் பிடித்த கருப்பு!

 
karuppu movie

கருப்பு வெற்றி: 

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரையரங்களில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கருப்பன். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி அபார சாதனை படைத்திருக்கிறது.

karuppu movie

சூர்யாவின் திரை வாழ்க்கையிலே ரூ. 300 கோடி வசூலீட்டிய முதல் திரைப்படமாக கருப்பன் திரைப்படம் பார்க்கப்படுகிறது. 13 ஆண்டுகளுக்கு பிறகு கிட்டத்தட்ட சூர்யாவுக்கு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அவருக்கு கை கொடுத்திருக்கிறது .

ரூ. 300 கோடி வெற்றி: 

இந்த நிலையில் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தைப் போன்று ரூ. 300 கோடிக்கு மேல் வசூலீட்டிய பிரம்மாண்ட தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ:

entiran

ரஜினியின் எந்திரன், கபாலி, 2.0 , ஜெயிலர் ,கூலி, விஜய்யின் வாரிசு, கோட், லியோ, மேலும் பொன்னியின் செல்வன் 1 , பொன்னியின் செல்வன் 2 , விக்ரம்,  அமரன்,  கருப்பு ஆகிய திரைப்படங்கள் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்த மாபெரும் சாதனை பெற்ற படங்களாக பார்க்கப்படுகிறது. இந்த லிஸ்டில் தற்போது சூர்யாவின் கருப்பு இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web