×

டெனட் படத்தை திருட்டுத் தனமாக பார்த்து சிக்கலில் மாட்டிக்கொண்ட ப்ளு சட்ட மாறன்!

தமிழ் சினிமாக்களை விமர்சனம் செய்து பிரபலம் ஆன ப்ளு சட்ட மாறன் இப்போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

 

தமிழ் சினிமாக்களை விமர்சனம் செய்து பிரபலம் ஆன ப்ளு சட்ட மாறன் இப்போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

யுடியூப்பில் கதியாய் கிடக்கும் தமிழர்களுக்கு ப்ளு சட்ட மாறனைப் பற்றி தெரியாமல் இருக்காது. அந்த அளவுக்கு பிரபலமான அவர் தமிழ் சினிமாக்களை கிழி கிழியென்று கிழித்து தொங்க விடுவார்.  இவரின் விவேகம் மற்றும் சார்லி சாப்ளின் ஆகிய படங்களின் விமர்சனங்களால் பல சர்ச்சைகளை உருவாக்கினார்.

இந்நிலையில் இப்போது ஹாலிவுட் படமான டெனட் படத்தை விமர்சனம் செய்து ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். இந்த படம் கொரோனா காரணமாக நீண்ட கால தாமதத்துக்குப் பின் நாளை வெளியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே பைரசியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த திருட்டு பிரிண்ட்களைப் பார்த்து விமர்சனம் செய்ய தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ்க்கு யாரோ தகவல் சொல்ல், அந்த நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது. இதனால் மாறனுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News