'ஜெயிலர்' கலெக்ஷனை தாண்டிடுமா விஜய்யின் 'ஜன நாயகன்'?... ரஜினியை கலாய்த்த 'ப்ளூ சட்டை' மாறன்!

 
Jana nayagan jailer blue sattai maran

நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் 'ஜன நாயகன்' படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. சென்சார் பிரச்சனையில் இப்படம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, முழு படமுமே ஆன்லைனில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் விஜய்யின் கடைசி படம் என்பதால், தியேட்டரில் டிக்கெட் புக் செய்து இப்படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

தற்போது, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தையும், அவரது 'ஜெயிலர்' படத்தையும் குறிப்பிட்டு பிரபல திரைப்பட விமர்சகர் 'ப்ளூ சட்டை' மாறன் எக்ஸ் தளத்தில் "தலீவர் நவ்: 'ஜெயிலர்' கலெக்சனை இது தாண்டிடுமா?

பைரசி வந்து பல நாள் ஆனபிறகும்... இவன் படம் ஹவுஸ் ஃபுல் ஆகுதே? என் ரசிகர்கள் முகத்துல எப்படி முழிப்பேன்? அரசியல், சினிமா ரெண்டுலயும் என்னை காலி பண்ணிட்டான். பேசாம நான்.. தமிழ்நாட்டை காலி பண்ணிட்டு.. இமயமலைக்கு ஓடிடட்டுமா?" என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web