அந்த வாயை வச்சுட்டு சும்மா இருந்திருந்தாலாவது பரவாயில்லை என்று தனது சமூக வலைதள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் கங்குவா டீமை விமர்சனம் செய்திருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே கங்குவா குறித்த செய்திகள் தான் இணையத்தில் குவிந்து வருகின்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் பீரியட் படமாக உருவாகி இருந்தது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா டிக்கெட் எடுக்க போறீங்களா? ஒரு நிமிஷம் இத படிங்க… ஷாக் ஆகிடுவீங்க..
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இப்படத்தின் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா முழுவதும் சுமார் 11,000 திரையரங்குகளில் இந்த திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 9 மணிக்கு கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆனது. படம் இன்று ரிலீஸாகி இருந்தாலும் கடந்த ஒரு மாதமாக படக்குழுவினர் மிகப் பிரபலமாக ப்ரோமோஷன்களை செய்து வந்தார்கள். அதிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்து எப்போது பேசினாலும் மிகப்பெரிய நம்பிக்கையுடன் பேசி வந்தார்.
இது ஓவர் பில்டப் ஆகவே பார்க்கப்பட்டு வந்தது. நடிகர் சூர்யாவும் இந்த திரைப்படத்தை பல இடங்களில் ஆகா ஓகோ என்று புகழ்ந்து பேசி இருந்தார். அது மட்டுமா கங்குவா திரைப்படத்தின் முதல் பாகத்தோடு வேண்டுமென்றால் மற்ற படங்கள் போட்டிக்கு வரலாம். முதல் பாகத்தை பார்த்துவிட்டு இரண்டாவது பாகத்துடன் எந்த படமும் போட்டிக்கு வராது என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் இன்று வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை தான் பெற்று இருக்கின்றது. சிலர் இந்த திரைப்படத்தை நன்றாக இருக்கிறது என்று கூறினாலும், பலரும் இப்படம் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள்.
அதிலும் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. அந்த பதிவில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘தேவையான அளவிற்கு மட்டும் படத்தை ப்ரோமோஷன் பண்ணிட்டு அமைதியா இருந்திருந்தால் கூட சுமார் படம் நல்ல வசூல் ஆகும். நல்ல படம் பெரிய ஹிட் கொடுக்கும்.
உதாரணமாக லப்பர் பந்து, அமரன் போன்ற படங்களை கூறலாம். ஓவர் பில்டப் தந்த தமிழ் படங்கள் பல தோல்வி அடைந்து இருக்கின்றது. அதற்கு உதாரணம் இந்தியன் 2. கங்குவா நிலை இப்ப என்னவாகும் என்பது இனிதான் தெரியும். இனிமேலாவது ஹாலிவுட் ரேஞ்ச் என்று சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: அந்த ஒரு படம்!… அடுத்த 5 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன்?!… மனம் திறந்த கெத்து தினேஷ்!…
அவதார், டைட்டானிக், ஜுராசிக் பார்க், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களின் தொழில்நுட்ப நேர்த்தி, பொருள் செலவு போன்றவற்றை தொடுவது மிக கடினம். அதை நாம் தொடும்போது அவர்கள் மேலும் பல மடங்கு முன்னேறி இருப்பார்கள். அந்த வாயை வச்சுட்டாவது சும்மா இருந்திருக்கணும்.. வெயிட்டிங் ஃபார் 200, 500,1000,2000 கோடிகள் வடைகள்’… எனப் பதிவிட்டுள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…