
Cinema News
Vijay: சனி, ஞாயிறு ஃபுல் மஜாதான்! ஃபேன்ஸ் ரெடியா இருங்க.. ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு
Vijay: கோலிவுட் வட்டாரத்தில் ஒரு திரை விமர்சகராக தன்னுடைய வித்தியாசமான பாணியில் வெளியாகும் புதிய படங்களை பற்றி அவ்வப்போது விமர்சனம் செய்து ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவருக்கு எதிராக எதிர்ப்புகள் இருந்தாலும் இவருக்கு என தனி ஃபேன்ஸ் பட்டாளமே இருக்கிறார்கள். படங்களைப் பற்றி அவர் விமர்சனம் செய்யும் அந்த தொணி அனைவரையுமே வெகுவாக ஈர்க்கும்.
காமெடியாக கிண்டலாக படங்களில் உள்ள நிறை குறைகளை அவர் சொல்வதை கேட்கும் பொழுது ரசிக்கும் படியாகவே இருக்கும். அந்த வகையில் டாப் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை தன்னுள் வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இவர் இப்போது தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் வார விடுமுறை ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் ட்ரீட் தான் என பதிவிட்டிருக்கிறார்.
அதாவது நாளை இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1500 க்கும் மேற்பட்ட படங்களில் 8500 க்கும் மேல் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவருடைய இசை பயணத்தின் பொன்விழா ஆண்டை பெருமைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் தலைமையில் நாளை நேரு ஸ்டேடியத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் என அனைவருமே ஒன்றுகூட இருக்கிறார்கள். அதே சமயம் அதே தேதியில் அதாவது நாளை தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை திருச்சியிலிருந்து தொடங்க இருக்கிறார் விஜய். இந்த சுற்று பயணத்திற்கு தன்னுடைய தொண்டர்களை தயாராக இருக்கும்படியும் அறிவுறுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஞாயிற்றுக்கிழமையில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இட்லிகடை படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற இருக்கிறது.

ஆக மொத்தம் இந்த மூன்று சம்பவங்களும் ரசிகர்களுக்கு ஒரு ஃபுல் ட்ரீட் ஆகவே அமையப்போகிறது. ஆக மொத்தம் மூன்று பேரின் பேச்சுக்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள் ,அதோடு மீம்ஸ் கிரியேட்டர்களும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள் என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.